Oakville வாசியான திரு Steve Camacho என்ற கனடிய பெருமகன் மட்டு மாவட்டத்தில் உள்ள தாந்தாமலை கிராமத்தில் கடும் இதய வருத்தத்தில் உயிருக்கு போராடும் திருமதி கேதீஸ்வரி ரவிச்சந்திரன் (நான்கு பிள்ளைகளின் தாயார்) அவர்களின் இதய சத்திர சிகிச்சைக்கு நிதி சேகரிக்கும் பொருட்டு நத்தார் தினத்தில் 15 கிலோமீட்டர் ஓடி முடித்துள்ளார்.

கேதீஸ்வரியின் இதய சத்திர சிகிச்சைக்கு மொத்தமாக $7000 தேவை. Steve அவர்களின் அன்பளிப்பான $1000 டொலர்களுடன் சேர்த்து மொத்தமாக $3400 சேர்ந்துள்ளது. இவரின் இலக்கான $7000 அடைய GO FUND ME இணையத்தில் நீங்கள் விரும்பினால் தானம் செய்யலாம். https://gofund.me/b81129ad கிடைக்கப்பெறும் முழு நிதியும் செந்தில்குமரனின் நிவாரணம் அமைப்பின் ஊடாக கேதீஸ்வரியின் சத்திர சிகிச்சைக்கு லங்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட உள்ளது. 8000 மைல்களுக்கப்பால் முகம் தெரியாத ஏழை நோயாளியின் இதய துடிப்பு தொடர வேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி இந்த செயலினை செய்த Steve அவர்களுக்கு அன்னை தெரேசாவின் வாக்கியம் பதித்த நினைவு பரிசினை செந்தில்குமரன் வழங்கினார்!