கொரோனா வைரஸ் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கி வருகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.5 கோடியை தாண்டியுள்ளது.

17.45 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 39 ஆயிரத்து 036 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்து 88 ஆயிரத்தைக் கடந்துள்ளதுகொரோனா வைரஸ் காரணமாக அங்கு 574 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 625 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.