கிழக்கு மாகாணத்தில் நான்காவது கொவிட் தொற்று மரணம் பதிவாதியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நேற்று (வியாழக்கிழமை) 54 வயதுடைய அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பொது மகன் நெஞ்சுவலி காரணமாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஈ.சி.ஜி.பரிசோதனையைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு வந்திருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டு, அன்டிஜென்ட் பரிசோதனையும் செய்தபொழுது குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .
குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனடிப்படையில் கல்முனை பிராந்தியத்தில் இதுவரை நான்காவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.