ஹட்டன், ஆரியகம பகுதியில் வீடு ஒன்று தீ பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த குடும்பஸ்த்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (24) மாலை வேளையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த குடும்பத்தில் உள்ளவர்கள் நாளை பிறக்கவிருக்கின்ற நத்தார் பண்டிகையினை முன்னிட்டு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக ஹட்டன் நகரத்திற்கு சென்றிருந்த வேளை வீடு தீபற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வீட்டில் இருந்த நபர் தீயில் சிக்கி பலியாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பலியான நபர் 3 பிள்ளைகளின் தந்தையான 74 வயதுடைய ஒய்வு பெற்ற ஆசிரியர் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரதேச மக்கள் தீயினை கட்டுபாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த போதும் அது பயன்னளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.