பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
சாணக்கிய நீதியின் பிரகாரம், திருமண வாழ்வில் கணவன் மனைவியின் உறவு இறுதிவரையில் மகிழ்ச்சியளிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட சில விடயங்களை பற்றி வெளிப்படையாக பேச வேண்டியது அவசியம் என குறிப்பிடுகின்றார்.
அப்படி கணவன் மனைவிக்கு இடையில் ரகசியமாக வைத்திருக்க கூடாத விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் கருத்துப்படி கணவன்-மனைவி இருவரும் தயக்கத்தாலேயோ அல்லது மரியாதையாலேயோ தங்களின் உரிமைகள் குறித்து ஒருபோதும் பேசுவதற்கு தயங்கவே கூடாது. இந்த விடயத்தில் ரகசியம் காப்பது நாளடைவில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
திருமண உறவில் எந்தளவுக்கு வெளிப்படை தன்மை இருக்கின்றதோ அதே அளவுக்கு உறவின் ஆழமும் அதிகரிக்கும்.
கணவன் மனைவி முன்கூட்டியே தங்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்தும் தெளிவாகப் பேசுவது சிறந்தது.
குடும்பப் பொறுப்பு என்பது கணவருக்கு மட்டுமே உரியதென மனைவி நினைத்தால் அது கணவனின் வாழ்க்கையை பாதிக்கும்.
அது போல் வீட்டு வேலைகள் செய்வதுதான் மனைவியின் வேலை என கணவன் நினைத்தால் இது மனைவியின் வாழ்க்கையை பாதிக்கும்.
எனவே ஒருவருக்கொருவர் தங்களின் வருங்கால இலக்குகள் குறித்து தெளிவாக பேசிக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றார் சாணக்கியர்.
சாணக்கியரின் கருத்துப்படி கணவன் மனைவிக்கு இடையில் காதலை வெளிப்படுத்த ஒருபோதும் தயக்கம் காட்ட கூடாது. காதல் இருந்தும் வெளிப்படுத்திக்கொள்ளாத காரணத்தால் பல திருமண உறவுகள் சலிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக கணவன் மனைவிக்கு இடையில் கோபம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மறைத்து வைத்திருப்பது மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனை அவ்வப்போது வெளிப்படுத்திவிட வேண்டும். பின்னர் சமாதானம் செய்துக்கொள்ள வேண்டும்.
அப்படி உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள வாழ்க்கை முழுவதும் ஒரு துணை தேவை என்பதால் தான் கணவன் மனைவி உறவை வாழ்க்கை துணை என்கின்றோம். எனவே உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள ஒருபோதும் தயக்கம் காட்டவே கூடாது.