அவிஸ்ஸாவெல்ல, கொஸ்கம மற்றும் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், திருகோணமலை அபயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெல்லம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள ´லக்சந்த செவன´ அடுக்குமாடி குடியிருப்பு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இதேவேளை, மேல் மாகாணத்தினுள் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் காரணத்தினால் புது வருட காலத்தில் மாவட்ட எல்லையை கடப்பதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகளை பிறப்பிக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார பணிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.