ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் கிளையும் இலங்கையில் கொவிட் - 19 இன் சர்வதேச தொற்று நிலையைக் கட்டுப்படுத்த தமது கரங்கள் கோர்க்கின்றன.

கொழும்பு, 17 மார்கழி 2020- இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் கிளையானது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தான 2 மில்லியன் யூரோ பெறுமதியான நிதி உதவி மூலம் இலங்கையில் கொவிட்-19 இன் பாதிப்பை குறைப்பதற்கான அவசர செயல்பாடுகளுக்கான திறனை அதிகரிக்க உதவுகின்றது.

கொவிட்-19 நோயாளர்களின் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் தொற்று நோயைத் தடுத்தல் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இந்த உதவியானது கவனம் செலுத்தும்.

ஒழுங்கமைக்கப்பட்ட நோயாளர் பராமரிப்பு செயல்முறைகளை உருவாக்குவது சிறந்த திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் முடிவெடுத்தலிற்கு உதவியாக அமையும்; அவற்றிற்கு மேலதிகமாக உதவியின் ஒரு முக்கிய பகுதி, கற்றல் செயல்பாட்டு அமைப்பின் முன்னேற்றம் மற்றும் பொது சுகாதார அவசரநிலைகளுக்கு பொறுப்பான சுகாதார அமைப்பின் திறனை எதிர்காலத்தில் நீடிப்பதற்கும் உதவும்.

இந்த நிதியானது ஏற்கனவே உள்ள தகவல் தொடர்பாடல் மற்றும் சமூக செயற்பாட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதோடு தகவல் தொடர்பாடல் சாதனங்களை தரமுயர்த்தலையும் உறுதி செய்யும் ,அத்துடன் பாதிக்கப்படக்கூடிய நபர்கள், இளைஞர்கள், மற்றும் சமூக அமைப்புகளின் நகர்வுகளை ஊக்குவித்து சமூக அளவிலான நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும்.

இறுதியாக, அத்தியாவசிய சேவைகளைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியானது மக்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் சேவைகளை அணுக வழிவகுப்பதோடு, சர்வதேசத் தொற்று நிலைமையால் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகளை அடையாளப்படுத்துகின்றது. "இலங்கைக்கான நிதியானது சர்வதேச கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கெதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய

செயற்பாடுகளின் ஒரு பகுதியாகும்" என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் H.E.டெனிஸ் ஜைபி கூறியுள்ளார். "உலக சுகாதார ஸ்தாபனத்துடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டானது, சுகாதாரத் துறையில் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டுவதற்கு மட்டுமல்லாமல், உள்ளூர் சமூக அமைப்புகளுடன் கைகோர்த்து பாதிக்கப்படக்கூடிய அபாயமுள்ள மக்களுக்கும் சிறப்புக் கவனம் செலுத்துகின்றது.

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் செயல் திறன்களை வலுப்படுத்துவது, நாம் அனைவரும் ஒன்றாக இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதையும்,சிறப்பாக மீளக் கட்டியெழுப்பப்படுவதையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய பகுதியாகும்.

இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியான வைத்தியர் ரசியா பெண்ட்சே, “உலகளாவியரீதியில் மற்றும் உள்நாட்டில் நோயாளர்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவது சர்வதேசத் தொற்று நோய்நிலைமை முடிவடைய நீண்ட காலம் உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது” என்கின்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சரியான நேரத்திலான முறையாக திட்டமிடப்பட்ட உதவியானது கொவிட்-19 ற்கான இலங்கையின் முன்னெச்சரிக்கை மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கான திட்டமிடல் செயல்படுத்தப்படுவதை அதிகரிப்பதோடு நோயாளர் பராமரிப்பு, ஆபத்தான தொடர்பாடல்கள் மற்றும் சமூக ஈடுபாடு, தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அத்தோடு அத்தியாவசிய சேவைகளை பராமரித்தல் ஆகிய தூண்களில் கவனம் செலுத்துகிறது.

கற்றல் செயல்பாட்டு அமைப்பின் வளர்ச்சியின் மூலமாக உருவாக்கப் பட்ட நவீன தொழில்நுட்பத்தின் விரிவாக்கமானது, திறன் வலுப்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியான கற்றல் நடவடிக்கைகள் மூலம் தற்போதைய சர்வதேச கொவிட்-19 தொற்று நோய் நிலைமைக்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்காக சிறப்பாக தயார்படுத்தப்பட்ட சுகாதார அமைப்பிற்கும் உதவியாக அமையும்.