லண்டனிலுள்ள வீடு ஒன்றிற்கு திங்களன்று மாலை 4 மணிக்கு அழைக்கப்பட்ட பொலிசார், வீட்டிற்குள் ஒரு இளம்பெண்ணும் ஒரு குழந்தையும் சடலமாக கிடப்பதைக் கண்டுள்ளனர். அந்த பெண்ணின் பெயர் Shiwangi Bagoan (25) என்றும், அந்த குழந்தை அவரது மகள் என்றும், அந்த சிறுமியின் பெயர் Ziana Bagoan (2) என்றும் தெரியவந்துள்ளது. மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Shiwangi, தன் மகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படுகிறது.

Shiwangi என் ஹெச் எஸ் மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணர் ஒருவரின் உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார்.

Shiwangiயின் அயலகத்தார், அவர் ஒரு நல்ல தாய் என்றும், தன் வாழ்வையே தன் மகள் Zianaவுக்காக அர்ப்பணித்தவர் என்றும், இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதையே தாங்கள் எப்போதும் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்புதான் தாயும் மகளும் தங்களுக்கு ஆளுக்கொரு சைக்கிள் வாங்கினார்களாம்.

Shiwangi, தன் தாய் மற்றும் தன் மகளுடன் வாழ்ந்துவந்ததாகவும், அவருக்கு கணவர் இருப்பதாக தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவரது அயலகத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை துவங்கியிருந்தாலும், வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.