வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து மீண்டும் கொரோனா தொற்று தாக்குவதற்கு ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500க்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், பிற நாட்டு இராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களையும் (PSP) கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
ஏற்கனவே சுமார் 250க்கும் அதிகமான படை வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் மேலும் புதிதாக 9 PSP வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதில் திரிபுராவில் 2 பேர், டெல்லியில் 6 பேர், கொல்கத்தாவில் ஒருவர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.