இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது பேசும் கருத்துக்களும், அவரது வீடியோக்களும் திடீரென வைரலாகும்.

அந்தவகையில், தற்போது தந்தி தொலைகாட்சிக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் தமிழ்மொழியைப் பற்றி அவர் கூறியிருக்கும் விடயமானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் உலகில் பழமை வாய்ந்த தமிழ் மொழியை பிரதமர் மோடி இட்லி, தோசையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால் நெட்டீசன்கள் அதற்கு எதிரான பல விமர்சனங்களை தற்போது முன்வைத்து வருகின்றனர்.

குறித்த காணொளியில் பிரதமர் மோடி தமிழ் மொழியைப் பற்றி இவ்வாறு கூறுயுள்ளார்,

“இன்றைக்கு இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் இட்லி, தோசை கிடைக்கிறது. ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரிலும் இட்லி தோசை கிடைக்கிறது. குஜராத்திலும் இட்லி, தோசை சாப்பிட முடியும். உலகம் முழுவதுமே இட்லி, தோசை பரவித்தான் இருக்கிறது. தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு மக்கள் கடுமையான 'செய்தியை' சொல்லப் போகிறார்கள்..

தோசை உலகம் முழுவதும் பரவி இருப்பது போல தமிழ் மொழியும் உலகம் முழுவதும் பரவ வேண்டும். ஆனால், அரசியல் காரணங்களால் தமிழ் மொழியை ஒரு பிராந்தியத்துக்குள் முடக்கி வைத்துள்ளனர். இது தமிழ் மொழிக்கு பெரும் பாதிப்பைத் தரும். இந்தியாவுக்கும் இது பாதிப்பு. இந்தியாவுக்கும் இது இழப்பு.“ என தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியை பெருமையாக பேசியாலும் அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் சர்சையை கிளப்பி வருகின்றது.

பிரதமர் மோடியின் குறித்த கருத்தை, தமிழ் ஆர்வளர்கள் மற்றும் விமர்சகர்கள் தற்போது விமர்சித்துவருகின்றனர்.

அதாவது, 'ஒரு நாட்டின் பிரதமர், அந்த நாட்டில் பேசப்படும் பெரும்பான்மை மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை இவ்வாறு விமர்சிப்பது அவ்வளவு பொருத்தமாக இல்லை' என குறிப்பிட்டுள்ளனர்.