கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 1279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,96,563 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூர் நகர்ப்புறத்தில் இன்று 728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
23,056 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 22,791 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் இன்று உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 11,900 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3218 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 8,61,588 பேர் குணமடைந்துள்ளனர்.