தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இன்று புதிதாக 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,92,788 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1,330 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரைக்கும் 7,70,378 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 10,588 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
இன்று தனியார் மருத்துவமனையில் 7 பேர், அரசு மருத்துவமனையில் 6 பேர் என 13 பேர் உயிரிழக்க, தமிழகத்தில் இதுவரை மொத்தம் 11,822 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 65,186 மாதிரிகளும், 64,743 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 1,26,05,289 மாதிரிகளும் 1,23,10,934 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.