முன்னாள் பிரித்தானிய மொடல் ஒருவர் தன் மகள்களுடன் தன் வீட்டுத் தோட்டத்தில் நிர்வாணமாக சூரியக்குளியல் போடுவதை ஹெலிகொப்டரிலிருந்து வீடியோ எடுத்துள்ளார் ஒரு பொலிசார். தனது 18, 15 மற்றும் 8 வயது மகள்களுடன் முன்னாள் மொடலான Tracy Dixon என்பவர் சூரியக்குளியல் எடுப்பது வழக்கம்.

அப்போது, அவர்கள் வீட்டுக்கு மேலாக பொலிஸ் ஹெலிகொப்டர் ஒன்று வாரத்திற்கு மூன்று முறை பறக்குமாம்.

இந்நிலையில், South Yorkshireபொலிசார், Adrian Pogmore (53) என்ற பொலிசார் Tracy சூரியக்குளியல் போடும் வீடியோக்களை எடுத்ததை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த Tracy, அந்த பொலிசார் யார் என பார்க்கும்போது, அவர் தான் Rotherhamஇல் பள்ளியில் படிக்கும்போது தன்னுடன் படித்த மாணவர் Adrian என்பது தெரியவரவே, மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Adrian, Tracy இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு, அவர் இருக்கும் வீட்டுக்கு மேல் ஹெலிகொப்டரில் பறந்து, அதி நவீன கமெராவைக் கொண்டு அவரையும், அவரது மகள்களையும் படம் பிடித்துள்ளார்.

Adrian மீது 200,000 பவுண்டுகள் இழப்பீடு கோரி Tracy தொடர்ந்த வழக்கில், அவருக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.