உடம்பிற்கு சிறந்த ஆற்றலை வழங்கும் பேரீச்சம்பழத்தினை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ள வேண்டும்.
பேரீச்சம் பழம்
சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்று தான் பேரீச்சம் பழம். உடனடியாக ஆற்றல் அளிப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.
இதில் பல ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடந்தாலும், இதனை நாம் எந்த அளவில் சாப்பிடுகின்றோம் என்பதை பொறுத்து தான் அதன் முழுபலனும் நமக்கு கிடைக்கும்.

அளவில் சிறிதாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகம் கொண்டதுடன், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கின்றது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கின்றது. இதனை சாப்பிடும் சில உலர் பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடுவதால் இயற்கை சர்க்கரை நமது உடம்பில் நேரடியாக உறிஞ்சுவதை தடுக்கின்றது.

எவ்வளவு சாப்பிடலாம்?
ஒரே நேரத்தில் 10 முதல் 15 பேரீட்சையை சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும் என்பதால் ஒரு வேலைக்கு ஒன்று அல்லது இரண்டு பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது தகுந்த இடைவெளியை விட்டு சாப்பிடும் போது தான் முழுமையான பலன்களை பெற முடியும்.

நோய்களை தீர்க்கும் அருமருந்தாக இருக்கும் பேரீச்சையை அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஆதலால் ஆரோக்கியமான வாழ்விற்கு பேரீச்சம்பழத்தினை தினமும் அளவாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழுங்கள்.

