பொதுவாக சருமம் அழகாக இருப்பதற்கு நாம் நாம் பல விடயங்களை செய்கிறோம். இது பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இப்படி அழகு படுத்துதல் ஒரு குறுகிய காலத்தில் நம்முடன் இருக்கும்.

இது காலத்ததுக்கும் நிற்காத. இத தவிர சருமத்தை அழகுபடுத்த பார்லருக்கு சென்று அதிக விலைக்கு சருமத்தை அழகுபடுத்துகிறோம். இவற்றை எல்லாம் விட நமது வீட்டில் சில சில அழகுக்குறிப்புக்களை பின்பற்றினால் அது நமக்கு ஆரோக்கியமான அழகை கொடுக்கும்.

இந்த முறையில் ஒன்று தான் முகத்திற்கு ஆவி பிடித்தல். இது செய்வதால் சருமத்திற்கு என்னென்ன நன்மை கிடைக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பார்லருக்கு செல்லாமல் அழகாக வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை செய்தால் போதும் | Facial Steaming Once A Week Get Glowing Skinநீரில் இருந்து வரும் நீராவி மார்பு நெரிசல், ஜலதோஷம் மற்றும் பிற சுவாச பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது.

இத தவிர இது அழுக்கு மற்றும் அசுத்தங்களை அகற்றவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும், பளபளப்பாகவும் பார்க்க உதவும்.

இது பல நூற்றாண்டுகளாக சரும அழகில் நடைமறையில் உள்ளது.சூடான நீராவி நமது சருமத்தின் உள்ளே செல்லும் போது அது நமது நீராவி துளைகளைத் திறக்க உதவுகிறது.

பார்லருக்கு செல்லாமல் அழகாக வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை செய்தால் போதும் | Facial Steaming Once A Week Get Glowing Skinஇதன் காரணமாக, முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் இறந்த சருமம் எளிதில் அகற்றப்படும். மிக மக்கியமாக முகத்தில் இருக்கும் கரும்புள்ளி குறையும்.நீராவி சருமத்தின் ஆழம் வரை சென்று சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகிறது.

நீங்கள் நாள் முழுக்க மேக்கப் போட்டிருந்தால் இந்த நீராவி பிடித்தல் உங்களுக்கு அழக்கை அகற்ற உதவும்.நீராவியின் வெப்பம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, உங்கள் சருமத்திற்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு வருகிறது.

இது உங்கள் சருமத்தை பிரகாசமாக பார்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தின் இயற்கையான பழுதுபார்க்கும் செயல்முறையையும் மேம்படுத்துகிறது.

பார்லருக்கு செல்லாமல் அழகாக வேண்டுமா? வாரம் ஒரு முறை இதை செய்தால் போதும் | Facial Steaming Once A Week Get Glowing Skinமுகத்துளைகள் திறந்த மற்றும் சுத்தமாக இருக்கும்போது, பாக்டீரியாக்கள் சிக்கி, வெடிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆவி பிடிப்பதால் குறைக்கப்படும்.

இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்காமல் கரும்புள்ளிகளை அகற்றுவதை எளிதாக்குகிறது. இந்த நீராவி பிடிப்பதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை பிடித்தால் சருமத்திற்கு நன்கு பயனளிக்கும்.