அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 900 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 149 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மட்டும் 768 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 13 ஆயிரத்து 906 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமீரகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.