கடந்த 1985-ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஒரு வயதில் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட காவன் எனப் பெயரிடப்பட்ட இந்த யானை, 24 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்தது. பாகிஸ்தானில் இருக்கும் ஒரே ஆசிய யானை என்பதால், நீண்டகாலம் இஸ்லாமாபாத்தில் உள்ள மர்காசர் உயிரியல் பூங்காவில் மக்கள் வந்து பார்த்து செல்லும் காட்சிப்பொருளாகவே காவன் பார்க்கப்பட்டது.

காவனின் தனிமையைப் போக்குவதற்காக 2009-ஆம் ஆண்டில், சாஹேலி என்னும் பெண் யானை அதனுடன் சேர்க்கப்பட்டது. அந்த யானையும் 2012-ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் இறந்தது. கடந்த 8 ஆண்டுகளாக சொல்லமுடியாத துயரத்திலும், கவனிப்பின்றி, சுவற்றில் முட்டி, முட்டி தனிமையை வெளிப்படுத்தி வந்த காவன் நேற்று முன் தினம் கம்போடியாவுக்கு விமானத்தில் பறந்தது. கம்போடியாவில் காவனுக்கு நிச்சயம் தனிமைச் சிறை இருக்கப்போவதில்லை.

 

காவன் யானை


 

காவன் யானை



கடந்த 2012-ஆம் ஆண்டு கானுக்கு துணையாக இருந்த, பெண் யானை சாஹேலி உடல்நலக்குறைவால் உயிரிழந்தபின், கடந்த 8 ஆண்டுகளாக காவன் மிகுந்த துயரத்தில் இருந்தது. காவனின் மனநிலையும், உடல்நிலையும் மிகவும் மோசமானதை அறிந்த பாகிஸ்தான் விலங்குகள் நல அமைப்பு, அமெரிக்க பாடகரும், நடிகையுமான சேர் (Cher), சர்வதேச விலங்குகள் நல அமைப்பு ஆகியோரின் முயற்சியால், காவனின் மீதான கவனம் ஏற்பட்டது.குறிப்பாக ஃபோர் பாஸ் இன்டர்நேஷனல் எனும் விலங்குகள் நல அமைப்பு எடுத்த மிகப்பெரிய முயற்சியால், காவனின் உடல்நிலை சீரடைந்தது. காவனை பாகிஸ்தானிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையும் எடுக்கப்பட்டது.

காவன் மீட்புக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்கப் பாடகி சீர், கம்போடியாவில் காவனை வரவேற்கச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.