தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதன்பின் வதந்தி என்று கூறுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடைசியில் அது வதந்தி என்று கூறப்பட்டது 

அந்த வகையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

விக்ரம்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருவான்மியூர் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். போன் செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்த விசாரணையையும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.