கன்னங்குறிச்சி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் புழுதிக்குட்டை கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சரவணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம நிர்வாக அலுவலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.