மில்லனிய மற்றும் மொரொன்துடுவ பொலிஸ் நிலையங்களின் சுமார் 100 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,099 ஆக அதிகரித்துள்ளது.