ரஜினி மக்கள் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் வரும் 30-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30-ம் தேதி ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை கோப்பு படம் சென்னை: ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் (நவம்பர் 30ந் தேதி) ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30ந் தேதி காலை நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் 30ந் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. காய்ச்சல் ஏற்பட்டதாகவும், கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது. மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டுமே உண்மை என ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி நடத்த உள்ள ஆலோசனையில் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30-ம் தேதி ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை
- Master Admin
- 28 November 2020
- (488)
தொடர்புடைய செய்திகள்
- 08 January 2021
- (513)
இப்படியும் விநோதம்... ஒரே சமயத்தில் 2 பெ...
- 25 February 2021
- (1108)
சுண்டுவிரலில் ஏற்பட்ட காயம்... அலங்கோலமா...
- 20 March 2021
- (1377)
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
- 19 September 2026
காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு! கீரிமலையில் குவியும் ஆபத்தான கழிவுகள்
- 19 September 2026
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்
- 19 September 2026
தியாக தீபத்தின் நான்காம் நாள் நினைவேந்தல்
- 18 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
- 18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
- 18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
