கோலிவுட் திரையுலகில் ஆக்சன் கிங் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவருடைய உறவினர் சிரஞ்சீவி சார்ஜா என்பவர் கன்னட திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அர்ஜூன் உறவினர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மருத்துவமனையில் அவர் மரணமடைந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் அர்ஜூன் வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல கன்னட மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.