தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.
இவர் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான ஹோ கயா நா என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் லஷ்மி என்ற படத்தின் மூலம் பெரிதும் பிரபலமானார்.
அதன் பின் அதை வரலாற்று புனைகதை தெலுங்கு திரைப்படமான மகதீரா தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை குறித்தது, அவரது விமர்சன பாராட்டைப் பெற்றது.
அதன்பின் 2008 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா விஷால் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 35 வயதான காஜர் அகர்வால் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். தனது குடும்பத்திற்கு நெருக்கமான மற்றும் பிரபல தொழிலதிபரான கவுதம் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு இவர் படங்களை நடிக்கவிருப்பதாகவும் அதற்கு மாப்பிள்ளை வீட்டாரிடம் சம்பந்தம் வாங்கியதாகவும் சினிமா தகவல் கசிகிறது. இதைக்கேட்ட காஜல் அகர்வாலின் ரசிகர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.