காரைக்காலில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 84 விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளைமறுதினம் (25-ந்தேதி) புதுச்சேரி - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மற்றும் புயலால் நாளையில் இருந்து 26-ந்தேதி வரை மூன்று நாட்கள மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், புயல் கரையை கடக்கும்போது 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பதற்காக காரைக்காலைச் சேர்ந்த 84 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கடலோர காவல்படை மூலமாக இந்தத் தகவலை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திரா உள்ள இடங்களில் கரை திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.