புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பஞ்சாப் விவசாய அமைப்புகளை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக வேளாண் அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த மாநிலத்தில் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.