நமது உடலில் பல முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்று.

சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை செய்கின்றன.

மேலும் செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன.

சிறுநீரகம், சிறுநீரை உருவாக்குவதற்கும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் சில பழக்கங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்று சிறுநீரக மருத்துவர் டாக்டர் வெங்கட்சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சிறுநீரகங்களைப் பாதுகாக்க காலையில் தவிர்க்க வேண்டிய 5 பழக்கங்கள் குறித்து அவர் விளக்கியுள்ளார்.

சிறுநீரகங்களைப் பாதிக்கும் 5 காலை பழக்கங்கள்.., கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | 5 Morning Habits That Can Harm Your Kidneys

1. காபி குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிக்கவும்- காலையில் எழுந்ததும் முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு முழுவதும் தூங்குவதால் உடலில் லேசான நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். 

2. காலையில் எழுந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும்- நீண்ட நேரம் சிறுநீரை அடக்குவது நல்லதல்ல. எனவே, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் அதைத் தாமதப்படுத்தாமல் வெளியேற்ற வேண்டும்.

3. வலி நிவாரணி மாத்திரைகளை தவிர்க்கவும்- தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.

4. உடற்பயிற்சிக்குப் பிறகு தண்ணீர் குடிக்கவும்-  காலையில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது. ஆனால், உடற்பயிற்சிக்குப் பிறகு உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலின் நீர்ச்சத்து சமநிலையைப் பராமரிக்க உதவும்.

5. காலை உணவைத் தவிர்க்காதீர்கள்-  அவசரமான வாழ்க்கை முறையால் பலர் காலை உணவைத் தவிர்க்கின்றனர். ஆனால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் வகையில் ஆரோக்கியமான காலை உணவைச் சாப்பிடுவது அவசியம்.