மேற்கு வங்காளத்தில் வீட்டின் வெளியே சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் களிமன் அடுப்பிற்குள் இருந்து விஷத்தன்மை கொண்ட பாம்புகள் ஏராளமாக வெளிவந்துள்ளது.
குட்டிகளுடன் சீறிய பாம்பு
பொதுவாக பாம்புகள் என்றால் மனிதர்கள் தலைறெிக்க ஓடுவார்கள். ஏனெனில் அதிக விஷத்தன்மை கொண்டதால் அவ்வாறான பயம் மனிதர்களுக்குள் இருந்து வருகின்றது.
மேற்கு வங்காளத்தில் கிராமம் ஒன்றில் வீட்டின் வெளியே சமையல் செய்வதற்கு களிமண்ணால் அடுப்பு செய்து அதில் சமைத்து வந்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக அதிலிருந்து பாம்பு வெளியே வருவதை பெண் அவதானித்த நிலையில், வெளியிலிருந்து மண்ணை சிறிது சிறிதாக இடித்துள்ளார்.
அப்பொழுது பாம்பு குட்டிகள் சில வந்துள்ளது. நன்றாக தோண்டி உள்ளே இருந்து எடுத்த போது தாய் பாம்பு சீறி படமெடுத்து அதிகமான குட்டிகளுடன் வெளியே வந்துள்ளது.
உடனடியாக வனவிலங்கு மீட்பு குழுவினர் அதனை மீட்டு வேறு இடத்தில் கொண்டுவிட்டுள்ளனர். வெயில் அதிகமாக இருந்து வருவதால் இவ்வாறான விஷப்பாம்புகள் குளிர்ச்சியான இடத்தினை தேடி வந்து இவ்வாறு வாழ்கின்றனர். ஆதலால் பொதுமக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.
