இந்த வாரம் ஓ.டி.டி தளத்தில் என்னென் படங்கள் வெளியாகியுள்ளது என்பதை பார்ப்போம்.

உலகளவில் மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு என்று எடுத்துக்கொண்டால் அது சினிமா தான். வாரந்தோறும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விடவும், வீட்டில் இருந்து பார்க்கும் ஓ.டி.டி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. அந்த வரிசையில், இந்த வாரம் ஓ.டி.டி தளத்தில் என்னென் படங்கள் வெளியாகியுள்ளது என்பதை பார்ப்போம். 

மண்டாடி

சூரி, மகிமா நம்பியார், சத்யராஜ் நடிப்பில் வெளியான படம் மண்டாடி. திரையரங்குகளில் சுமார் 150 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை பார்க்கலாம். 

பாரிஸ் கபே

குரு சோமசுந்தரம், அனுமோல் கே மனோகரன் ஆகியோர் நடிப்பில், சராஜ் சீலன் இயக்கிய பாரிஸ் கபே திரைப்படம், ப்ரைம் வீடியா, சிம்ப்ளி சௌத் மற்றும் ஆஹா ஓ.டி.டி தளத்தில் தமிழில் வெளியாகியுள்ளது. 

லீஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்

தெலுங்கில் வெளியான காமெடி வெப் தொடரான லீஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் தெலுங்கு மொழி மட்டும் இல்லாமல், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஈ.டி.வி பாரத் ஆகிய ஓடி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.

இ.பி.ஐ.சி

தெலுங்கில் ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் இ.பி.ஐ.சி. ஆதித்யா ஹாசன் இயக்கிய இந்த திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. 

கலிஃபா 

ப்ரித்விராஜ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி வெளியான திரைப்படம் கலிஃபா. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில், ப்ரைம் வீடியோ, மலையாளம் மனோரமா, ஆஹா, சிம்ப்ளி சௌத், லைன்ஸ்கேட் ப்ளே ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாகியுள்ளது. 

ஐஸ்

மலையாளாத்தில் தயாரான இந்த வெப் தொடர் அக்டோபர் 9-ந் தேதி முதல் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. மலையாளம்,தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.