எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் பிரண்டையை எவ்வாறு சமைத்து சாப்பிடுவது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சாதாரணமாக கொடி போன்று வளரும் பிரண்டையை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் நல்ல பலனை பெற முடியும். அதிக கால்சியம் சத்து கொண்ட பிரண்டையை துவையலாக சாப்பிடலாம்.

எலும்பு ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் பிரண்டையை எவ்வாறு துவையலாக சாப்பிடுவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

எலும்புகள் பலவீனமாக இருக்கின்றதா? பிரண்டையை இப்படி சாப்பிட்டு பாருங்க | Bone Health Pirandai Thuvaiyal Recipe

 

தேவையான பொருட்கள்

பிரண்டை - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 6
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1\2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1\2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

எலும்புகள் பலவீனமாக இருக்கின்றதா? பிரண்டையை இப்படி சாப்பிட்டு பாருங்க | Bone Health Pirandai Thuvaiyal Recipe

செய்முறை

பிரண்டையை கையில் எடுப்பதற்கு முன்பு சிறிதளது நல்லெண்ணெய் கையில் தடவிக் கொண்டால் அரிப்பு, எரிச்சல் வராமல் இருக்கும்.

பிரண்டையை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். கொடுக்கப்பட்ட பருப்பினை பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.

காய்ந்த மிளகாய், பெருங்காயம் இவற்றினையும் வறுத்து தனியாக வைத்து, கடாயில் சிறிதளது எண்ணெய் சேர்த்து பிரண்டையை பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுக்கவும்.

வறுத்த பருப்பு, மிளகாய், புளி, தேங்காய், உப்பு இவற்றினை கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்பு பிரண்டையை சேர்த்து, தண்ணீர் தெளித்து துவையல் பதத்திற்கு அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து துவையலை தாளித்துக் கொள்ளவும். சூடான சாதத்தில் பிரண்டை துவையல், நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

பிரண்டையை சரியாக வதக்கி சமைப்பது மிகவும் முக்கியமாகும். பிரண்டை சற்று அரிப்பு ஏற்படுத்தும் என்பதால் முதலில் சாப்பிடுபவர்கள் சிறிதளது எடுத்துக் கொள்வது சிறந்தது.

எலும்புகள் பலவீனமாக இருக்கின்றதா? பிரண்டையை இப்படி சாப்பிட்டு பாருங்க | Bone Health Pirandai Thuvaiyal Recipe

நன்மைகள் என்ன?

பிரண்டை கை,கால் வலி, மூட்டு வலி இவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

உடல் சோர்வு நீங்கள் உற்சாகத்துடனும், ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு உதவுகின்றது.

தொற்று நோய் மற்றும் பற்களில் பிரச்சனை வராமல் தடுக்கின்றது.

அஜீரண கோளாறை நீக்குவதுடன், உடைந்த எலும்புகள் வேகமாக சேர்வதற்கும் உதவுகின்றது.

மாவிடாய் வலியை போக்குவதுடன், சுவாச சம்பந்தமான நோய்களையும் போக்குகின்றது.

எலும்புகள் பலவீனமாக இருக்கின்றதா? பிரண்டையை இப்படி சாப்பிட்டு பாருங்க | Bone Health Pirandai Thuvaiyal Recipe