நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகி, வெளியாகியுள்ள சிக்மா திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்தை தெரிந்துக் கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் ‘சிக்மா’. வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில் சந்தீப் கிஷன் நடிப்பில் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், சிவ் பண்டிட், ஷீலா ராஜ்குமார், அன்பு தாசன், யோக் ஜபீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் சார்பில் ஏ. சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. முதலில் ஜூலை 31ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது. தற்போது அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகியுள்ளது. படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவையும், கே.எல். பிரவீன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். அதிரடி காட்சிகளுக்கு வெங்கட் மற்றும் சில்வா பணியாற்றியுள்ளனர். இதனால் ஜேசன் சஞ்சய்யின் முதல் படமான ‘சிக்மா’ மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘சிக்மா’ திரைப்படத்தை தணிக்கை குழுவினர் பார்வையிட்ட நிலையில், பெரிய அளவில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சிறிய மாற்றங்கள் மற்றும் சேர்த்தல்களுக்குப் பிறகு படத்திற்கு வெளியீட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டது. மேலும் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தை வெகுவாக பாராட்டினர். முதல் படத்திலேயே ஜேசன் சஞ்சய் விறுவிறுப்பான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்து அதை சுவாரஸ்யமாக கொடுத்திருப்பாக பாராட்டினர்.
