பொதுவாக பலரும் இரவில் தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், இது என்னென்ன தீங்கை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இரவில் பால் குடிப்பது நல்ல துக்கத்திற்கு உதவும் என்றாலும் இது அனைவருக்கும் பொந்தாது. சிலருக்கு லாக்டோஸ் இண்டாலரண்ட் எனப்படும் அலர்ஜி ஏற்படும். இதனால் செரிமான கோளாறு, வயிறு உப்புசம் ஏற்படும்.

தூங்குவதற்கு முன்பு பால்குடிப்பதால் அமில ரிப்ளைக்ஸ் சுரப்பிகளை தூண்டி விட வாய்ப்புள்ளதாம். ஏனெனில் பாலில் கொழுப்பு மற்றும் புரதம் ஆகிய இரண்டும் இருப்பதால் அமிலம் சுரப்பதற்கு காரணமாவதுடன், இது நெஞ்செரிச்சல், இதயம் வேகமாக துடிப்பது போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இரவில் பால் அருந்தக்கூடுாது. ஏனெனில் பாலில் கலோரி அதிகமாக இருப்பதால் இவை உடல் எடையை அதிகரித்துவிடுகின்றது.

சிலருக்கு பால் குடிப்பதால் உடலில் அலர்ஜி ஏற்படுவதுடன், உடலில் அரிப்பு, ஆங்காங்கே சிவப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனை ஏற்படுகின்றது.

இரவில் பால் குடிப்பதால் இவ்வளவு பிரச்சனையா? பலரும் அறியாத உண்மை | Night Time Don T Milk What Reasonஅதே போன்று இரவில் பால் அருந்திவிட்டு படுத்தால் சளி தொந்தரவு ஏற்படும். இதனால் மூக்கடைப்பு ஏற்பட்டு இரவு தூக்கத்தையே கெடுத்துவிடுகின்றது.

நாள்பட்ட நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், கால்சியம் குறைபாடு காரணமாக மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் இரவில் பால் அருந்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை சாப்பிடும் மருந்துடன் இணைந்து எதிர்வினை அறிகுறிகளை காண்பிக்குமாம்.

இரவில் பால் குடிப்பதால் இவ்வளவு பிரச்சனையா? பலரும் அறியாத உண்மை | Night Time Don T Milk What Reason