இந்த வாரம் ஓ.டி.டி தளத்தில் என்னென்ன படங்கள் வெளியாகியுள்ள என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வாரந்தோறும் தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு இணையாக ஒ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் ஓ.டி.டி தளத்தில் என்னென்ன படங்கள் வெளியாகியுள்ள என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹாய் (தமிழ்)
கவின் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி வெளியான படம் ஹாய். காதல் காமெடியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை விஷ்ணு எடவன் இயக்கியிருந்தார், பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, பூர்ணிமா பாக்யராஜ், வி.டிவி. கணேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.இந்த படம் ஜீ 5 தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஹபீபி (தமிழ்)
மீரா கதிரவன் இயக்கத்தில் இஸ்லாத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட படம் ஹபீபி. இஜா, மாளவிகா மனோஷ் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்த இந்த படம் கடந்த ஜூன் 12-ந் தேதி வெளியானது. .ந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சோனி லிவ் சேனலில் வெளியாகியுள்ளது.
போட்டோகிராஃபர் (தமிழ்)
அஷ்ரப் அலி இயக்கி நடித்துள்ள படம் போட்டோகிராஃபர். ஃபேண்டஸி த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி வௌயானது. இந்த படம் தற்போது ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது,
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு)
தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி வெளியான படம் ரம்பா ஊர்வசி மேனகா. காமெடி ஃபேண்டஸ அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது, தெலுங்கு மட்டும் இல்லாமல், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை பார்க்கலாம்.
அகதா (தெலுங்கு)
தெலுங்கில் எம்.எஸ்.ராஜூ இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 14-ந் துதி வெளியான படம் அகதா. சூப்பர் நேச்சுரல் ஹாரார் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது. தெலுங்கு மட்டும் இல்லாமல், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை பார்க்கலாம்.
மேன்ஷன் ஹவுஸ் மல்லேஷ் (தெலுங்கு)
தெலுங்கில் ஸ்ரீநாத் மெகந்தி, காயத்ரி ரமணா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மேன்ஷன் ஹவுஸ் மல்லேஷ். இந்த படம் தற்போது ப்ரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.
