இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும் பொழுது கிரக தோஷங்கள் குறிப்பாக சனி கிரக தோஷங்கள் நீங்கும்.
துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும். தொழில், வியாபார முடக்க நிலை நீங்கி நல்ல லாபம் கிடைக்கும்.
திருமண பாக்கியம், குழந்தைப்பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு சிறந்ததாகும்.
ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும் பொழுது அவரை திருப்தி படுத்த குறிப்பிட சில பொருட்களை கொண்டு வழிபட்டால் கேட்ட அனைத்தும் கிடைப்பதுடன் நிதி பிரச்சினைகள் தானாக நீங்கும் என்பது ஐதீகம். அவை எந்தெந்த பொருட்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
லட்டு
ஆஞ்சநேயருக்கு பூந்தியால் செய்த லட்டு அல்லது உளுத்தம் பருப்பில் செய்த லட்டுக்களை படைத்து செவ்வாய்க்கிழமைகளில் அர்ச்சினை செய்தால் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதி பிரச்சினை நீங்க லட்டு படையல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
குங்குமம்
பொதுவாகவே அனைத்து தெய்வ வழிபாடுகளிலும் குங்குமம் முக்கிய இடம் வகிக்கின்றது. அது போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் குங்குமம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. ஆஞ்சநேயருக்கு குங்கும அபிஷேகம் செய்வது நமது அனைத்து துயரங்களையும் பண பிரச்சிகைகளையும் நிச்சயம் போக்கும்.
வெற்றிலை
ஆஞ்சநேயர் வழிபாட்டில் வெற்றிவை இன்றியமையாதது. வெற்றிலைகளை ஆஞ்சநேயருக்கு சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து சிக்கல்களும் விலகும் என நம்ப்படுகின்றது.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் மாலையிட்டால் மிகவும் பிடிக்குமாம். இதனால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.