பிக்பாஸ் நிகழ்ச்சி 15 நாட்களை கடந்துள்ள நிலையில் போட்டியாளர் முனியம்மா செய்வது குறித்து ஹவுஸ் மேட்ஸ் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி  தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆனாலும், இந்த சீசன் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீசன் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. அதில் நிகழ்ச்சி தொடங்கிய 3-வது நாளே பிளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக காமன் மேனில் இருந்து மணிவண்ணன் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். 

இதையடுத்து இரண்டாவது வாரத்தில் ஆனந்தி வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் மக்கள் யாருக்கு குறைவான வாக்குகளை அளிக்கிறார்களோ அந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார். 

ஆனால் இந்த சீசனில் புதுவிதமாக, வீட்டின் கேப்டனாக இருப்பவர், டாஸ்கில் சரியாக பர்ஃபார்ம் செய்யாத மூவரை தேர்வு செய்வார். அவர்களில் யார் வெளியேற வேண்டும் என சக போட்டியாளர்கள் ஓட்டிங் செய்து, அதில் யாருக்கு அதிக வாக்குகள் வருகிறதோ அவர் எலிமினேட் செய்யப்படுவார். அப்படி முதாலில் சாவின்யா எலிமினேட் செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை நடந்த எபிசோடில், வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களால் வாக்களிக்கப்பட்டு ஜாவித் பிக்பாஸிலிருந்து வெளியேறினார்.

இதையடுத்து, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்கள் அளித்த வாக்கு அடிப்படையில் மணிவண்ணன் வெளியேறி உள்ளார். இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு அவினாஷ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.