மகாபாரத புராணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

ரஜினிகந்த் நடிப்பில் வெளியாகி 36 ஆண்டுகள் கடந்திருந்தாலும் தளபதி படத்திற்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படத்தன் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஒரு சூப்பர் ஹிட் பாடல் குறித்த தகவலை இளையராஜா பகிர்ந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் தான் தளபதி. ரஜினிகாந்த், மம்முட்டி, ஷோபனா, ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், கீதா, பானுப்பிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம தான் நடிகர் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம். மம்முட்டி கேங்ஸ்டராக நடித்திருந்த இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அம்ரீஷ் பூரி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 

1991-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மகாபாரத புராணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றிபெற்றது. கடந்த 2024-ம் ஆண்டு ரஜினிகாந்தின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு தளபதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 

படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் தளபதி படம் குறித்த பேச்சுகள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் இந்த படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இளையராஜா, தளபதி படத்தில் கம்போஸ் செய்யும்போது, படத்தின் இயக்குனர் மணிரத்னம், இந்த டியூன் வேண்டாம் வேற ட்ரை பண்ணலாமா என்று கேட்டார். அப்போது நான் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலுக்கு இசையமைத்திருந்தேன். 

வேறு டியூன் பார்க்கலாம் ராஜா என்று அவர் சொன்னவுடன், நான் மணி இந்த டியூனை மிஸ் பண்ணிடாதீங்க என்று சொன்னேன். இந்த ஒரு வார்த்தை சொன்னவுடன் அவர் அப்படியா என்று கேட்டுவிட்டு உடனே பாடலை எடுத்துக்கொண்டார். அப்படி உருவானது தான் இந்த பாடல் என்று கூறியுள்ளார்.