Lakshmi Narayan Rajyog : ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களும், அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
அந்த வகையில், செப்டம்பர் மாத இறுதியில் சுக்கிரன் மற்றும் புதன் இணைவதால் மிகவும் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.
அசுரர்களின் குருவாகவும், அழகு, காதல், செல்வம், செழிப்பின் காரணியாகவும் சுக்கிரன் கருதப்படுகிறார். அதேபோல், கிரகங்களின் இளவரசனாகவும், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரத்தின் காரணியாகவும் புதன் கருதப்படுகிறார். இவ்விரு கிரகங்களும் சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசியில் இணைவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
வேத நாட்காட்டியின்படி, செப்டம்பர் 27ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே புதன் இருப்பதால், இரு கிரகங்களின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகும். இதன் தாக்கத்தால் சில ராசிகளின் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். செப்டம்பர் இறுதியில் உருவாகும் இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5-ஆம் வீட்டில் புதன்–சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நிதி நன்மைகள் கிடைப்பதுடன், ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த பணிகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச்சந்தை, ஊடகம், ஐடி துறையினருக்கு காலம் சாதகமாக இருக்கும்.
துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன்–சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
அரசு தொடர்பான பணிகள் வெற்றிகரமாக முடியும். வெளிநாட்டு தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.பணப் பிரச்சனைகள் குறைந்து, மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
தனுசு

தனுசு ராசியின் 11-ஆம் வீட்டில் புதன்–சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகள் இருந்தாலும் நிதிநிலை சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 9-ஆம் வீட்டில் புதன்–சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
ஊடகம், மார்க்கெட்டிங், கலைத் துறையினருக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சிலருக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வாழ்க்கைத்துணையுடனான உறவில் இனிமையும் அதிகரிக்கும்.
