நியூமராலஜி என்பது எண்களுடன் தொடர்புடைய அதிர்வுகளை அர்த்தப்படுத்தும் ஒரு வழிமுறையாகும். ஜோதிடம் ராசி மற்றும் நட்சத்திரங்களின் மூலம் ஒருவரின் ஆளுமையை அறிந்து கொள்ள உதவுவது போல நியூமராலஜி ஒருவரின் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஆளுமையைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள உதவுகிறது.
ஒவ்வொரு நபரின் பிறந்த தேதியும் அவர்களின் ஆளுமை, குறிப்பாக அவர்களின் உணர்ச்சி விருப்பங்களை பாதிக்கும் சில பண்புகளுடன் தொடர்புடையது. எண் கணித கணிப்புகளின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் கோபம் மற்றும் ஆக்ரோஷமான நடத்தைக்கு ஆளாகிறார்கள். அவர்களின் கோபம் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்த தேதிகளில் பிறந்தவர்கள் எளிதில் கோபப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து மாதத்திலும் 18 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த தேதியில் பிறந்தவர்கள் உணர்ச்சிரீதியில் எளிதில் எதிர்வினையாற்றக்கூடியவர்களாகவும், எளிதில் கோபப்பட்டு வெடித்துச் சிதறக்கூடியவர்களாகவும், எளிதில் ஆத்திரப்படக் கூடியவர்களாகவும் இருக்கலாம். 1 மற்றும் 8 இன் ஆற்றல் சிக்கலான ஒன்றாக இணைந்து 18 என்ற எண்ணை உருவாக்குகிறது.
இந்த எண்ணானது லட்சியத்தையும் சுதந்திரத்தையும் இணைக்கிறது. ஆனால் இந்த கலவையானது எல்லையற்ற எரிச்சலையும், பொறுமையின்மையையும் ஏற்படுத்தும், இது கோபப் பிரச்சனைகளை அதிகப்படுத்தலாம். இது அவர்களின் தனிப்பட்ட உறவில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
அனைத்து மாதத்திலும் 29 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்தவித முன்யோசனையுமின்றி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும், மனக்கிளர்ச்சி உள்ளவர்களாக இருக்கலாம். 2 மற்றும் 9 எண்களின் ஆற்றல்கள், தைரியமான மற்றும் உத்வேகத்துடன் இணைந்து, எண் 29 ஐ உருவாக்குகின்றன.
கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, இந்த கலவையானது அவசர உணர்ச்சிகரமான எதிர்வினைகளையும், எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடும். இவர்களின் இந்த ஆக்ரோஷம் அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கும்.
அனைத்து மாதத்திலும் 9 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த தேதியில் பிறந்தவர்கள் ஆத்திரம் போன்ற தீவிர உணர்வுகளுக்கு ஆளாகலாம். தீவிர உணர்வு, ஆர்வம் மற்றும் நீதி உணர்வு ஆகியவை எண் 9 உடன் இணைக்கப்பட்டுள்ளன. உணர்ச்சிப் போராளிகளாக அடையாளம் காணப்படும் இவர்கள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் தார்மீக தரநிலைகள் குறித்து வலுவான உணர்வுகளைக் கொண்டிருக்கலாம்.
இந்த எண்களில் பிறந்தவர்கள் அநீதிகள் அல்லது விதி மீறல்களைக் காணும்போது அவர்கள் அடிக்கடி தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் கோபம் நியாயமானதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் இவர்களுக்கு பாதகமானதாக இருக்கும்.
அனைத்து மாதத்திலும் 30 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த தேதியில் பிறந்தவர்கள் இலட்சியம் சார்ந்த கோபத்தை வெளிப்படுத்துபவர்களாக இருக்கலாம். எண் 30 என்பது கற்பனை மற்றும் வெளிப்படையான எண்ணான 3 உடன் அன்பு மற்றும் அக்கறையுள்ள எண் 0 இன் கலவையாகும். இந்த கலவையானது மக்கள் தங்கள் விரக்தியை குரல் அல்லது கலைரீதியாக வெளிப்படுத்த காரணமாக இருக்கலாம். இந்த எண்ணில் பிறந்தவர்களின் கோபம் அவர்களின் தன்னம்பிக்கை குறைவின் வெளிப்பாடாக இருக்கலாம்.
அனைத்து மாதத்திலும் 27 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த தேதியில் பிறந்தவர்கள் அடிக்கடி அதிக உணர்ச்சிவசப்படும் உணர்திறனைக் கொண்டுள்ளனர், இதனால் அவர்கள் கோபத்தை அதிகமாக அனுபவிக்கவும் வெளிப்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது. சுதந்திரமான மற்றும் தன்னம்பிக்கையான எண் 7 மற்றும் அன்பான மற்றும் இரக்கமுள்ள எண் 2 ஆகியவற்றின் ஆற்றல்கள் இணைந்து 27 என்ற எண்ணை உருவாக்குகின்றன. இந்த கலவையால் ஏற்படும் உள் சிரமங்கள் உணர்ச்சி வெடிப்புகளை ஏற்படுத்தலாம். இது அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.