படத்தின், அதிகாரப்பூர்வ பூஜை விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தில் முதல்முறையாக ஜெயராம் – சிம்ரன் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த சிம்ரன், குணச்சித்திர வேடத்தில் கலக்கிய நடிகர் ஜெயராம் இருவரும் புதிய திரைப்படம் ஒன்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். 

தமிழில் விஜய், அஜித் தொடங்கி கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை சிம்ரன், சிறிய இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். அதன்பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் சிம்ரன், ரஜினி நடிக்கும் தர்மன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

அதேபோல் தமிழில் பல படங்களில் ஹீரோ, குணச்சித்திரம், சில படங்களில் வில்லன் என பன்முக கலைஞராக வலம் வரும் ஜெயராம், சமீபத்தில் வெளியான கர, பரிமளா அண்ட் கோ, ஜி.டி.என். உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ஸ்ரீமன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பஞ்ச தந்திரம் படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். 

தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு, ஜெயராம் – சிம்ரன் மீண்டும் ஒரு படத்தற்காக இணைந்துள்ளனர். ஜோதிகா நடித்த 'ராட்சசி' மற்றும் அருள்நிதி நடித்த 'கழுவேத்தி மூர்க்கன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஒய். கௌதம்ராஜ் இயக்கும் இந்த படத்தின், அதிகாரப்பூர்வ பூஜை விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தில் முதல்முறையாக ஜெயராம் – சிம்ரன் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

மேலும் இந்த புதிய திரைப்படத்தில் 'வாழை' பொன்வேல், தேவிகா சதீஷ் மற்றும் பகவதி பெருமாள் (பக்ஸ்) ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள நிலையில், ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் கே. விஜய் பாண்டி மற்றும் ரிலாக்டட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷான்ஜன் ஜி ஆகியோர் இணைந்து தயாரிக்க, பிரபல நடிகர் ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' நிறுவனமும் இப்படத்தை வழங்குகிறது.