ரேவதியை தேடி கோவிலுக்கு செல்லும் அவர், தீபம் அணையாமல் இருக்க தனது கைகளால் பாதுகாத்தபடி ரேவதி அங்கே அமர்ந்திருப்பதை கண்டு திகைக்கிறான்.
கார்த்திகை தீபம் கடந்த எபிசோடில், கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் பிரியாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட கோவிலில் தீபம் ஏற்றுமாறு பரமேஸ்வரி பாட்டி அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
பாட்டி கூறிய கோவிலுக்கு அழைத்துச் செல்லுமாறு ரேவதி கார்த்திக்கிடம் கேட்கிறாள். முதலில் இந்த மாதிரியான விஷயங்களில் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று கூறும் கார்த்திக், ரேவதியின் விருப்பத்திற்காக அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறான். கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை பார்த்த ரேவதி, “சாதாரணமாகத்தான் நினைத்தேன். ஆனால் இவ்வளவு பேர் இங்கே தீபம் ஏற்ற வருகிறார்களே!” என்று ஆச்சரியப்படுகிறாள்.
அப்போது தீபம் வாங்கச் செல்லும் கடையில், கடைக்காரர் ஒரு விஷயத்தை கூறுகிறார். “இந்த தீபம் அணையாமல் இருந்தால் அந்த தம்பதியரை யாராலும் பிரிக்க முடியாது” என்ற அவரது வார்த்தைகள் ரேவதியின் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கார்த்திக் அறிவுறுத்தினாலும், ரேவதியின் மனதில் அந்த எண்ணம் நீங்கவில்லை. இருவரும் தீபம் ஏற்றி விட்டு வீடு திரும்பினாலும், ரேவதி தொடர்ந்து அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்.
வீட்டிற்கு வந்ததும் நடந்த விஷயத்தை பரமேஸ்வரி பாட்டியிடம் பகிர்ந்து கொள்கிறாள். அதற்கு பாட்டி, “அதையெல்லாம் நினைத்து பயப்படாதே. தீபம் நன்றாகவே எரியும்” என்று ஆறுதல் கூறுகிறார். ஆனால் அந்த இரவே எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. நடு இரவில் ரேவதி காணாமல் போனதை அறிந்து கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். அவளை தேடி கோவிலுக்கு செல்லும் அவர், தீபம் அணையாமல் இருக்க தனது கைகளால் பாதுகாத்தபடி ரேவதி அங்கே அமர்ந்திருப்பதை கண்டு திகைக்கிறான்.
இந்த நேரத்தில் ஏன் இங்கே வந்திருக்கிறாய்?” என்று கார்த்திக் கேட்க, ரேவதி தனது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறாள். “அம்மாவும் சித்தியும் சேர்ந்து நம்மை பிரித்து விடுவார்களோ என்ற பயம் என்னை வாட்டுகிறது” என்று கண்கலங்குகிறாள். ரேவதியின் இந்த பயத்தை போக்க கார்த்திக் என்ன செய்யப் போகிறார்? அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உண்மையை சொல்ல மறுக்கும் ஜீவா.. வீட்டை விட்டு வெளியேற தயாராகும் மீனாட்சி.. வாகை சூடவாவில் இன்று!
வாகை சூடவா சீரியலில் கடந்த எபிசோடில், ஜீவா மீது பணம் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஜீவாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அப்பத்தா வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள பரபரப்பான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.
மீனாட்சி எத்தனை முறை கேட்டாலும் ஜீவா உண்மையை வெளிப்படுத்தாமல் அமைதியாகவே இருக்கிறான். ஒரு கட்டத்தில், உண்மையை சொல்லி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மனோ முடிவு செய்கிறான். ஆனால், அவர் பேசுவதற்கு முன்பே ஜீவா தடுத்து நிறுத்தி கடுமையாக திட்டுகிறான். இதைப் பார்த்த அப்பாவுக்கு சந்தேகம் அதிகரிக்கிறது.
இவர்கள் இருவரும் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறார்கள்" என்ற எண்ணம் அப்பா மனதில் உருவாகிறது. அதே நேரத்தில், ஜீவா தொடர்ந்து உண்மையை சொல்ல மறுப்பதால் மனமுடையும் மீனாட்சி, "இந்த வீட்டில் நான் ஏன் இருக்க வேண்டும்?" என்று கூறி வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுக்கிறாள். அவள் பையை எடுத்துக் கொண்டு வெளியேற முயற்சிக்க, வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
உடனே சக்தி மற்றும் தேன்மொழி அவளை சமாதானப்படுத்தி தடுத்து நிறுத்துகிறார்கள். பின்னர், அவளை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வந்து ஆறுதல் கூறுகின்றனர். இதையடுத்து, இந்த பிரச்சனையை தானே தீர்த்து வைப்பதாக மனோ முடிவு செய்து, அப்பத்தாவை நேரில் சந்தித்து உண்மையை கூறச் செல்கிறான். மனோ சொல்லப் போகும் அந்த உண்மை என்ன? ஜீவா ஏன் தொடர்ந்து மறைக்கிறான்? மீனாட்சியின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருவுக்கு உருவாகும் சந்தேகம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் கவிதா.. திருமாங்கல்யத்தில் இன்று!
திருமாங்கல்யம் சீரியலில் கடந்த எபிசோடில், மகாவின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட திவ்யா, காஞ்சனாவிடம் மனம் திறந்து பேச முடிவெடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள பரபரப்பான திருப்பங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இன்றைய எபிசோடில், காஞ்சனா திவ்யாவை வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார். ஆனால் திவ்யா, "நான் நாளைக்கு வருகிறேன்" என்று கூறுகிறார். அதற்கான காரணத்தை காஞ்சனா கேட்க, அலுவலகத்தில் நடந்த தீ விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க சித்தியுடன் செல்ல இருப்பதாக திவ்யா தெரிவிக்கிறார். இதைக் கேட்டு கவிதா அதிர்ச்சியடைகிறார்.
அந்த நேரத்தில் திரு, அலுவலக வேலைகளை பின்னர் கவனிக்கலாம் என்றும், முதலில் வீட்டிற்கு செல்லுமாறும் திவ்யாவிடம் கூறுகிறார். இதையடுத்து திவ்யா, காஞ்சனாவுடன் வீட்டிற்குப் புறப்படுகிறார். மறுபக்கம், அம்பிகா மகாவிடம் மறுநாள் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
இதற்கிடையில் திரு, கவிதாவை சந்தித்து அலுவலகத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து விசாரிக்கிறார். அனைத்தும் தயாராக இருப்பதாக கவிதா பதிலளிக்கிறார். மேலும், திவ்யா அலுவலகத்திற்கு வரப்போவதாக கூறியிருப்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை என திரு தனது கவலையை வெளிப்படுத்துகிறார். பின்னர் திரு ஏற்பாடு செய்த டிடெக்டிவ், அலுவலகத்தில் நடந்த தீ விபத்துக்கும், மகாவை கொலை செய்ய முயன்ற சம்பவத்துக்கும் ஒரே நபர்தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறார். இந்த தகவலைக் கேட்டு கவிதா கடும் பதற்றமடைகிறார்.
அதேசமயம், இந்த சம்பவங்களின் பின்னணியில் கௌதம் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் திருவின் மனதில் வலுப்பெறுகிறது. நிலைமை மோசமாகி வருவதை உணரும் கவிதா, உடனடியாக கௌதமுக்கு போன் செய்து, திரு அனுப்பிய டிடெக்டிவ் உண்மைக்கு மிக அருகில் வந்துவிட்டதாக எச்சரிக்கிறார். அதற்கு கௌதம், "எல்லாவற்றுக்கும் காரணமான மகாவை நான் சும்மா விட மாட்டேன். அவள் என்னை மிகவும் அவமானப்படுத்திவிட்டாள்" என்று கோபத்துடன் பேசுகிறான்.
இந்நிலையில் அம்பிகாவும் மகாவும் கோவிலுக்கு வருகிறார்கள். அங்கே என்ன நடக்கப்போகிறது? கௌதம் தனது அடுத்த திட்டத்தை செயல்படுத்துவானா? திருவின் சந்தேகம் உண்மையை நோக்கிச் செல்லுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
