வீட்டில் அதிகமாக பேரீச்சம்பழம் புளி இருந்தால் அதை  சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் சாப்பாடு சுவையாக இருக்கும்.

பேரீச்சம்பழ மற்றும் புளி வைத்து ஒரு ஒரு அருமையான சட்னி செய்யலாம். இது கொஞசம் காரமாகவும் கமகம என்ற மணத்துடன் சுவையாகவும் இருக்கும். இந்த  சட்னியை எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பேரீச்சம்பழ புளி சட்னி - சுவையான ரெசிபியை எப்படி செய்வது தெரியுமா? | Food Tamarind And Date Chutney Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  • விதையற்ற புளி
  • பேரீச்சம்பழம்
  • வெல்லம் அல்லது சர்க்கரை
  • தண்ணீர்
  • உலர்ந்த இஞ்சி தூள்
  • வறுத்த சீரகத் தூள்
  • சிவப்பு மிளகாய் தூள்
  • மற்றும் கருப்பு உப்பு

பேரீச்சம்பழ புளி சட்னி - சுவையான ரெசிபியை எப்படி செய்வது தெரியுமா? | Food Tamarind And Date Chutney Recipe In Tamil

செய்வது எப்படி

முதலில், புளி மற்றும் பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊறவைத்து அவற்றை மென்மையாக்க வேண்டும். இப்போது வெல்லம் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்து குறைந்த தீயில் எல்லாம் சேர்த்து சமைக்கவும்.

இந்தக் கலவை நன்கு வெந்து கெட்டியானதும் வழமையில் நீங்கள் வடிகட்ட பயன்படுத்தும் பொருளை வைத்து வடிகட்ட வேண்டும். இதை அப்படியே ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

இது நன்றாக ஆறியவுடன் குளிர்சாதன பெட்டியில் காற்று புகாத டப்பாவில் வைக்கவும். இப்பதிவில் கூறப்பட்டது போல முறையயை பின்பற்றி ரெசிபியை செய்யும் போது அது இன்னும் சுவை தரும். 

அவ்வளவு தான் இந்த பேரிச்சம்பழ புளி சட்னியை நாம் எந்த உணவுடனும் வைத்து சாப்பிடலாம். குழந்தைகள் பெரியவர்கள் என எல்லோரும் விரும்பி உண்பார்கள். 

பேரீச்சம்பழ புளி சட்னி - சுவையான ரெசிபியை எப்படி செய்வது தெரியுமா? | Food Tamarind And Date Chutney Recipe In Tamil