Mercury Transit In Leo : ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக புதன் கருதப்படுகிறார்.
சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் ராசி மாற்றம் செய்யும் புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். ஆகஸ்ட் 22 அன்று சிம்ம ராசிக்குள் நுழைந்த புதன், செப்டம்பர் 7 வரை அங்கு சஞ்சரிக்கிறார்.
சிம்ம ராசியின் அதிபதியான சூரியனும் அங்கு இருப்பதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் வேலை மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பெறக்கூடும்.
சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் புதனால் அதிக பலன் பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் 2-ம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால், நிதி நிலை மேம்படும். புதன் மற்றும் சூரியனின் அருளால் தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உறவுகள் வலுப்படும்.
புதிய வழிகளில் வருமானம் கிடைப்பதற்கான வழிகள் திறக்கும். குறிப்பாக புதிய தொழில் தொடங்குவதற்கான நேரம் கூடிவரும்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 4-ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். புதாதித்ய ராஜயோகம் இருந்தால், புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் கடின உழைப்புக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.
திருமண வாழ்வில் நீண்ட காலமாக இரு்நது வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
மீனம்

மீன ராசியின் 6-ம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால், நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம்.
வெளிநாடு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபமும், வியாபார விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
சிக்கிய பணம் வந்து சேரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து, வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் திட்டங்களும் நிறைவேற வாய்ப்புள்ளது.
