கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உலகளவில் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் ஐந்து கோடியே ஏழு இலட்சத்து 31ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உலகளவில் வைரஸ் தொற்றினால் 12இலட்சத்து 61ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர மூன்று கோடியே 57இலட்சத்து 93ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பும் மற்றும் உயிரிழப்புகளை சந்தித்த நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.