shriya sarantalk about cm vijay : நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து சமீபபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் விஜய் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கி தனக்கென ஒரு கட்சியை தொடங்கினார்.

முதல்வர் விஜய் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்.. இணையத்தில் வைரல்! | Shriya Saran Open Talk About Tamilnadu Cm Vijay

மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதுடன் ஆட்சியும் சிறப்பாக நடத்தி வருகின்றார்.

இதையடுத்து, திரையுலகைச் சேர்ந்த பலரும் விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் ஆட்சி குறித்து தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகை ஸ்ரேயா சரண், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாக விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதல்வர் விஜய் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்.. இணையத்தில் வைரல்! | Shriya Saran Open Talk About Tamilnadu Cm Vijay

விஜய்யை பாராட்டிய ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண் பேசுகையில், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அவர் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பது பாராட்டுக்குரியது.

மக்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என  தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்.. இணையத்தில் வைரல்! | Shriya Saran Open Talk About Tamilnadu Cm Vijay

மேலும், “இனி வரும் காலங்களிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.