வேத ஜோதிடத்தில் சனி பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கரணம் சனி பகவான் நீதியின் கடவுளாக அறியப்படுகின்றார்.  

ஒவ்வொருவரின் கரும வினைகளுக்கு ஏற்ற வகையில், பலன்களை பாரபட்சமின்றி கொடுப்பவர்.மற்ற கிரகங்களைவிட நீண்ட காலம் ஒரு ராசியிலும் நட்சத்திரத்திலும் பயணிக்கும் சனி, 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியையும், 5–6 மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுகிறார்.

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்! | Saturn Transit In Revati Nakshatra Who Get Luck

 

சனியின் நிலையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான், ஆகஸ்ட் 20-ம் தேதி ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழைந்து, அக்டோபர் 9-ம் தேதி வரை அங்கு இருப்பார்.

இந்த நட்சத்திரப் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும், 4 ராசிக்காரர்கள் வாழ்வில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர்.

குறிப்பாக இதுவரை பிரச்சனைகளால் சிரமப்பட்டு வந்தவர்கள், அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்! | Saturn Transit In Revati Nakshatra Who Get Luck

 

சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகைகளில் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய காலமாக அமையப் போகிறது.

குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது பணியில் முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, தங்களது தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும்.

மேலும், எதிர்பாராத சில நல்ல செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலைமையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு, பணவரவு அதிகரிக்கும்.சமூகத்தில் உங்களின் மதிப்பும், கௌரவமும் உயரும்.

மிதுனம்

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்! | Saturn Transit In Revati Nakshatra Who Get Luck

 

சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். பல்வேறு வழிகளில் இருந்து எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும்.

இதுவரை இருந்த நிதி நெருக்கடிகள் படிப்படியாக குறைந்து, புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் சூழல் காணப்படும்.

நீண்ட காலமாக சிக்கிக் கிடந்த பணம் இந்த காலகட்டத்தில் கைக்கு வந்து சேருவதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் மற்றும் மனக்கசப்புகள் முடிவுக்கு வந்து, சுமுகமான சூழல் உருவாகும்.

கன்னி

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்! | Saturn Transit In Revati Nakshatra Who Get Luck

சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல வழிகளிலும் சாதகமான பலன்களை வழங்கக்கூடியதாக இருக்கும்.

குறிப்பாக நீண்ட நாட்களாக மனதில் இருந்த கவலைகள் மற்றும் மன அழுத்தங்கள் குறைந்து, மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆரம்பத்தில் அவை சற்று சவாலாகத் தோன்றினாலும், அவற்றை சிறப்பாகச் செய்து முடிப்பதன் மூலம் உங்களின் திறமை வெளிப்படும்.

நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், இந்த பெயர்ச்சிக்குப் பிறகு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.

துலாம்

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்! | Saturn Transit In Revati Nakshatra Who Get Luck

சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கும்.

குறிப்பாக, இந்த மாற்றங்கள் பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றாகவும், உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் அமையலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் அல்லது முக்கியமான பணிகள் வழங்கப்படும்.

அவற்றை திறம்பட கையாள்வதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டையும், நல்ல அங்கீகாரத்தையும் பெறலாம். நிதி ரீதியாக முன்னேறுவதற்கான புதிய பாதைகள் திறக்கும். வருமானத்தில் ஏற்றம் உண்டாகும்.