ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார்.
தற்போது சுக்கிரன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில்தான் சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்தார். கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். இந்நிலையில், சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்தில் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.

துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிரனே என்பதால், சுக்கிரன் தனது சொந்த ராசியில் சஞ்சரிக்கும்போது மிகவும் மங்களகரமானதும், பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றுமான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
மாளவ்ய ராஜயோகம் செல்வம், செழிப்பு, காதல், சொத்து, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியதாகக் கருதப்படுகிறது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்பட்டாலும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் இதன் மூலம் சிறப்பான நிதி நன்மைகளையும், தொழில் முன்னேற்றத்தையும் பெறப்போகின்றார்கள்.
அப்படி சுக்கிரன் ஆசியால் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் தன்னம்பிக்கையும் ஆளுமையும் அதிகரிக்கும்.
பணியில் புதிய பொறுப்புகள், வியாபாரத்தில் விரிவாக்க வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வருவதுடன், புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும்.
மகரம்

மகர ராசியின் 10-ஆம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
முதலீடுகள் மூலம் லாபமும், புதிய வருமான ஆதாரங்கள் தானாக உருவாகும். திருமண வாழ்க்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.
கும்பம்

கும்ப ராசியின் 9-ஆம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் காலமாக இது அமையும். வெளிநாட்டு தொழில் தொடர்புடையவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு சாதகமான செய்திகள் வர வாய்ப்புள்ளது. பணியிலும் வருமானத்திலும் முன்னேற்றம் ஏற்படலாம்.
கடகம்

கடக ராசியின் 4-ஆம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் செல்வச் சேர்க்கை அதிகரிக்கலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளும் கைகூடலாம். வியாபாரத்தில் லாபமும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும் வாய்ப்பும் உள்ளது.
