விவசாயிகளுக்கான பட்ஜெட்டாக அமைந்து விவசாயிகளின் மகனாக விஜய் உருவெடுத்துள்ளார்.
பட்ஜெட் மீது பொது விவாதத்தின் மீது தவெக எம்எல்ஏ அபிஷேக் உரையாற்றியதாவது,
முதலமைச்சர் விஜய் OG சமூக நீதி மாடல் அரசை நடத்தி வருகிறார், என்னை போன்ற GEN-Z தலைமுறையை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்த்தவர், இந்த சட்டப்பேரவையில் நிறைய சிறப்புகள் உள்ளது.
கடந்த 16 முறை இல்லாத தனிச்சிறப்பு இந்த 17 சட்டமன்றத்தில் உள்ளது. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற உண்மையான சமூக நீதியை உருவாக்கியுள்ளது. இந்த ஆட்சியில் பெண்களுக்காக ஆட்சி‘
நாங்களே ஆட்சியாளர்கள் நாங்களே எஜமானர்கள் என்ற பழைய மாடலின் தோரணையை விஜய் ஆட்சி தகர்த்திருக்கிறது. ஊழலற்ற ஆட்சி என்பது தினம் தினம் உறுதியாகிக்கொண்டிருக்கிறது.
கற்பி ஒன்றுசேர் அரசியல் பழகு என்று எங்களுக்கு கற்று கொடுத்தவர் தமிழக முதலமைச்சர் விஜய். இந்த பட்ஜெட் அனைவருக்கும் திருப்பி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றார். விவசாயிகளுக்கான பட்ஜெட்டாக அமைந்து விவசாயிகளின் மகனாக விஜய் உருவெடுத்துள்ளார்.
