இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சிவாலயம் பெய்களால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இப்பொழுது நாம் விரிவாக பார்க்கலாம். நம்முடைய இந்தியா கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாக பார்க்கப்படுகிறது.

அதாவது குக் கிராமங்கள் துவங்கி பெரிய பெரிய நகரங்கள் வரை சிறப்புமிக்க பல்வேறு ஆலயங்களும் அதற்கு பின்னால் மிகப்பெரிய அளவில் வரலாறுகளும் உள்ளது. அந்த வகையில், பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டுள்ளது தான் கக்கன்மாத் சிவன் கோவில்.இந்த கோவில் பேய்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கக்கன் மாத் என்கின்ற கோவில் மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிகோனியாவில் அமைந்திருக்கும் கோவிலாகும். சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த ஆலயம் மத்திய பிரதேசத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க கூடிய ஒரு முக்கியமான ஆலயங்களில் ஒன்று.

ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்ம கோவில்.. 6 மணிக்கு மேல் இங்கு அனுமதியில்லை | Madhyapradesh Kakanmath Temple Mystery And History

இந்த கோயில் சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலை புனித ஆலயம் என்று அழைப்பதை விட மர்ம கோவை என்று பலரும் கூறுகின்றனர். காரணம், அறிஞர்களே குழம்பும் வகையில் இந்த கோவிலில் சில விஷயங்கள் நடக்குமாம்.

பொதுவாக, எந்த கோவிலாக இருந்தாலும் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதில் இருக்கும் சந்துக்கள் பூசி தான் கட்டப்படும். ஆனால், இந்த கோவிலில் கற்களால் மட்டும் கட்டப்பட்டிருக்கிறது. இதில் சுண்ணாம்பு சிமெண்ட் என எதுவும் பயன்படுத்தவில்லை.

பலருக்கும் அது எப்படி கலவைகள் எதுவும் இல்லாமல் பெரும் கற்களால் ஆலயம் கட்டப்பட்டு இருக்கும் என்று கேள்விகள் குழப்பங்கள் வருகிறது. இதற்கான விடையை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அதாவது, எந்த பசையும் போட்டு கட்டப்படவில்லை என்றாலும் பல நூறு ஆண்டுகளைக் கடந்து பல வெள்ளம், புயல், காற்று, நிலநடுக்கம் எல்லாம் பார்த்து அருகில் இருக்கக்கூடிய கட்டிடங்கள் அழிந்தும் அவையெல்லாம் கடந்து இன்று கம்பீரமாக நிற்கக்கூடிய ஆலயமாக இது விளங்குகிறது.

ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்ம கோவில்.. 6 மணிக்கு மேல் இங்கு அனுமதியில்லை | Madhyapradesh Kakanmath Temple Mystery And History

இந்த கோவிலை பற்றி பல்வேறு முக்கிய கதைகள் சொல்லப்படுகிறது. அந்த வகையில், 11 ஆம் நூற்றாண்டில் கச்சபகத வம்சத்தை சேர்ந்த மன்னன் கீர்த்திராஜாவின் மனைவி ககன்வதி, தீவிர சிவபக்தையாக இருந்துள்ளார். இவருடைய வேண்டுகோளின் படி பதினோராம் நூற்றாண்டில் இந்த பிரம்மாண்ட சிவன் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்க, மறுபுறம் இந்த கோவிலை தனக்காக கட்ட சொல்லி பேய்களுக்கு சிவபெருமான் கட்டளை இட்டதாகவும் இவற்றை பூதங்கள் சேர்ந்து கட்டியதாகவும் இந்த பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

இதில் வரும் கதைகளின் அடிப்படையில் ஒரே இரவில் கட்டி முடிக்க வேண்டும் என்பதால் பேய்கள் இந்த கோவிலை அசுர பலம் கொண்டு கட்டியதாகவும், விடியற்காலை நேரங்களில் பேய்களுக்கு சக்தி குறைந்துவிடும் என்பதால் அவர்கள் அவைகள் அப்படியே கோவிலின் பணிகளை அரைகுறையாக விட்டுவிட்டு மறைந்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இந்த கோயில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மூடப்படுகிறது. அதற்குமேல் கோவிலுக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், இந்த ஆலயம் சுற்றி பார்ப்பதற்கு ஒரு மணி நேரமாவது தேவைப்படும் என்று சொல்கின்றனர்.