அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பிடனுக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கையில் மறுபுறம் பல உலக நாடுகளின் தலைவர்கள் மௌனம் காத்து வருகின்றனர்.

அனைத்து சட்ட சவால்களும் தீர்க்கப்படும் வரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்க மெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மறுத்துவிட்டார்.

அத்தோடு ஜோ பிடன் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவருடனும் தனது நாடு நல்ல உறவைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படையான ஏமாற்றம் குறைவாக இருந்தபோதிலும், ட்ரம்ப்பின் நிர்வாகத்துடன் அன்பான உறவைப் பேணி வந்த பல முக்கிய தலைவர்களும் பிடனின் வெற்றியைப் பற்றி பேசாமல் மௌனமாக இருந்தனர்.

குறிப்பாக பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மற்றும் சவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் அடங்குவர்.

இதேவேளை ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் சீனா ஜி ஜின்பிங் ஆகியோரின் வாழ்த்துக்கள் எதிர்பாக்கப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.