ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன. அதன் தாக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலிக்கும் என நம்ப்படுகின்றது.

அந்த வகையில், ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஜூலை மாத மத்தியில் ஒரு அரிதான கிரக அமைப்பு உருவாகிறது. இந்த அமைப்பில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு முக்கிய கிரகங்களும் ராகு மற்றும் கேதுவுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைகின்றன.

ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! | Rahu Ketu Forms Rare Planetary Who Get Bad Luck

ராகு மற்றும் கேது எப்போதும் 180 டிகிரி இடைவெளியில் இருப்பதுடன், தற்போது ராகு கும்ப ராசியிலும் கேது சிம்ம ராசியிலும் உள்ளனர். இந்த இரண்டிற்கும் இடையில் அனைத்து முக்கிய கிரகங்களும் அமைந்திருப்பதால், இது அரிதான கிரக வலையாக பார்க்கப்படுகின்றது.

இந்த நிலை ஜூலை 19 வரை நீடிக்கும். இந்த கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை அளிக்கக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இதனால் சிக்கலை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மிதுனம்

ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! | Rahu Ketu Forms Rare Planetary Who Get Bad Luck

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை 19 வரை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் சில சவால்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தகவல் தொடர்பில் இடைவெளி, முடிவெடுப்பதில் குழப்பம் மற்றும் பிறருடன் தவறான புரிதல்கள் உருவாகலாம். இந்த கிரக நிலை காரணமாக சில எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

திருமண வாழ்க்கையிலும் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாழ்க்கைத் துணையுடன் பொறுமையாகவும் திறந்த மனதுடனும் பேசுவது நல்லது.

கடகம்

ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! | Rahu Ketu Forms Rare Planetary Who Get Bad Luck

கடக ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரகச் சேர்க்கை சில சவால்களை ஏற்படுத்தக்கூடும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் அவை உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.பயணங்களின் போது, குறிப்பாக வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை.

திருமண வாழ்க்கையில் அமைதியை நிலைநிறுத்த, துணையின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அன்பும் ஆதரவும் காட்டுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியம்.

சிம்மம்

ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! | Rahu Ketu Forms Rare Planetary Who Get Bad Luck

கேது சிம்ம ராசியில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் நிதி, உறவுகள் மற்றும் முக்கிய முடிவுகளில் சில குழப்பங்களை எதிர்கொள்ள நேரிடும்.

பணியிடத்தில் கவனக்குறைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள், இல்லையெனில் எதிர்பாராத சிக்கல்கள் உருவாகி தொழிலில் பிரச்சினை உருவாகும்.சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்ல பலனைத் தரும்.

பொறுமையுடன் செயல்பட்டு, ஒவ்வொரு பணியையும் கவனமாக முடிப்பது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். யாருடனுடம் வாக்குவாத்தில் ஈடுப்படுவதை தவிர்பது நல்லது.