கால் பெருவிரலுக்கு அருகில் உள்ள விரல் நீளமாக இருந்தால் அவர்களின் வாழ்க்கைமுறை எவ்வாறு இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
விரல் கூறும் சாஸ்திரம்
சாஸ்திரத்தின்படி, உடல் உறுப்புகளின் அமைப்பு மற்றும் வடிவத்தின் அடிப்படையில், ஒருவரின் இயல்பு மற்றும் பிற விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.
சிலருக்கு சாதாரணமாக விரல் நீளம் இருக்கும். ஆனால் சிலருக்கோ நீளத்தில் வேறுபாடுகள் இருக்கும். அதிலும் காலின் பெருவிரலுக்கு அருகில் உள்ள இரண்டாவது விரல் நீளமாக இருந்தால், இதற்கு பின்னே ரகசியம் மறைந்துள்ளதாம்.

கட்டை விரலுக்கு அருகில் உள்ள விரல் மிகப்பெரியதாக இருந்தால் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுவார்களாம். இது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொருந்துமாம்.
மேலும் இவர்களின் முகபாவனைகள் கவர்ச்சிகரமானவை, மற்றவர்களை ஈர்க்கும் தனித்துவமான திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
பெண்களின் நீளமான விரல்
பெண்ணின் இரண்டாவது விரல் பெரியதாக இருந்தால், தனது கணவரை மிகவும் நேசிப்பவராக இருப்பார்கள். மேலும் தனது காதலை பொதுவெளியில் வெளிப்படுத்தாமல், கோபம் மட்டுமே வெளிப்புறமாக இருக்கும்.
உள்ளுக்குள் மிக அமைதியானவராகவும், எளிமையானவராகவும் இருக்கும் இவர்களின் வாழ்க்கை ஆரம்பத்தில் போராட்டம் நிறைந்ததாகவே இருக்கும்.
கடின உழைப்பு, ஆற்றல் கொண்ட இவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவதுடன், அர்ப்பணிப்புடன் தனது வேலையிலும் இருப்பார்கள்.

ஆனால் சில தருணங்களில் சோம்பேறித்தனத்தின் அறிகுறியும் இவர்களிடம் இருக்கலாம். தலைமைத்துவ பண்புகள் அதிகம் கொண்ட இவர்களை, யாரும் தடுக்க நினைத்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
நிதி ரீதியாகவும் திறமையாக செயல்படும் இவர்களின் வெற்றி 35 அல்லது 40 வயதிற்கு பின்பு தான் தெரியும். மென்மையான இருதயத்தினைக் கொண்டவர் இவர்கள், யாராவது கசப்பான ஒன்றை கூறினால் அதனை மனதில் கொள்வார்கள்.
வேலையில் அதிக பொறுப்புடன் இருக்கும் இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பதில்லையாம்.

